தேசிய செய்திகள்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + CBI has filed chargesheet against P Chidambaram's wife Nalini Chidambaram in a court in Kolkata, in connection with Saradha scam.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு:  நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
கொல்கத்தா

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

இந்த நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.