உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் - அகிலேஷ் யாதவ்


உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் - அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 11 Jan 2019 12:17 PM GMT (Updated: 11 Jan 2019 12:17 PM GMT)

உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்து 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டுவிட்டன. இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் வசம் ஆட்சி சென்றது. 

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம், அவர்கள் கூட்டணியில் இடம் பெறுகிறார்கள், இல்லையென்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கு கிடையாது” என கூறினார். 
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உ.பி.யில்தான் உள்ளது. இந்த இரு தொகுதிகளில் வேண்டுமென்றால் காங்கிரஸ் போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story