தேசிய செய்திகள்

“சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்?” ரெய்டு விவகாரத்தில் அரசு மீது அகிலேஷ் யாதவ் பாய்ச்சல் + "||" + Who Will Investigate CBI Akhilesh Yadav s Dig At Government Over Raids

“சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்?” ரெய்டு விவகாரத்தில் அரசு மீது அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்

“சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்?” ரெய்டு விவகாரத்தில் அரசு மீது அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்
சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்? என கேள்வி எழுப்பியுள்ள அகிலேஷ் யாதவ் ரெய்டு விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு பதவியிலிருந்து நீக்கியது. இதனையடுத்து  சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே சி.பி.ஐ.யில் இரண்டாவது அதிகாரியாக இருந்த ராஜேஷ் அஸ்தானாவிற்கு எதிரான லஞ்ச வழக்குகளை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டு மறுத்து விட்டது. அலோக் வர்மா மற்றும் ராஜேஷ் அஸ்தானா இடையிலான பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதம் தொடர்கிறது.

 2019 தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணியை அறிவித்துள்ளது. இந்நிலையில்  உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது.  இதுதொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ., முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவை கண்காணிப்பு வளையத்திற்கு கீழ் கொண்டு வந்துள்ளது. விசாரணை தொடரும் நிலையில் சி.பி.ஐ. மோதல் விவகாரத்தில் மத்திய அரசை சாடியுள்ளார் அகிலேஷ் யாதவ். 

அகிலேஷ் யாதவ் பேசுகையில், சி.பி.ஐ. அமைப்பிலே பல சண்டைகள் நடக்கிறது. பல குற்றச்சாட்டுகள், அதற்கு பதில் குற்றச்சாட்டுகள் என தொடர்கிறது. இப்போது சி.பி.ஐ.யை விசாரிக்க போது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு எதிரான வழக்கில் விசாரணையை சந்திக்க நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சனம் செய்துள்ளார்.