பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு


பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 2:29 PM GMT (Updated: 11 Jan 2019 2:29 PM GMT)

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,
 
1998-ல் கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.  மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ. என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.

மேல்மூறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

Next Story