தேசிய செய்திகள்

காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு + "||" + Intermittent snowfall in Kashmir, flight operations hit at Srinagar airport

காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு

காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,

காஷ்மீர்  மாநிலத்தின் பல நகரங்களில் இரண்டாவது நாளாக இன்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. விட்டு விட்டு தொடர்ந்து பனிப்பொழிவு நிலவியது. பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஒரே சாலையான ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

பனிப்பொழிவு காரணமாக குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில்  நேற்று குறைந்தபட்ச வெப்ப நிலையாக மைனஸ் 0.8 டிகிரி செல்சியசாக இருந்தது. நகர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தப்பட்டு இருந்ததுபோல் காணப்பட்டது. லே பகுதியில் மைனஸ் 11.9 டிகிரி செல்சியாக வெப்ப நிலை காணப்பட்டது. 

ஆசிரியரின் தேர்வுகள்...