ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி


ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:27 AM GMT (Updated: 12 Jan 2019 10:27 AM GMT)

ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்வது என்ன வகையான மன நிலை என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி

பாரதீய  ஜனதா கட்சியின்  தேசிய மாநாடு  டெல்லி ராம் லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  

மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஊழலற்ற நிர்வாகத்தை  மத்திய பாஜக அரசு தந்துள்ளது. முழுமையான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் குறித்து ஊழல்  குற்றஞ்சாட்டவில்லை என்று நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. உண்மையில் நாம் பெருமை கொள்ளலாம் நம் மீது எந்த களங்கமும் இல்லை என்று. எங்களுக்கு முன்னால் உள்ள அரசு  நாட்டை இருளுக்கு தள்ளியது.  முக்கியமாக 10  ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்ததாக நான் சொன்னால் அது தவறு அல்ல.

பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். 
 
ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கார் சி.பி.ஐ.க்கு தடை விதித்து உள்ளார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். அதைக்கண்டு பயப்பட. இன்று அவர்கள் சிபிஐயை ஏற்றுக்கொள்ளவில்லை,   நாளை அவர்கள் வேறு எந்த நிறுவனத்தையும் ஏற்கமாட்டார்கள். இராணுவம், போலீஸ், சுப்ரீம்  கோர்ட் , தேர்தல் ஆணையம் சி.ஏ.ஜி ஆகியவை அனைத்தும் தவறு, அவர்கள் மட்டும்  சரி.

2007 ல், ஒரு சில மாதங்களில்  மோடி சிறையில் அடைக்கபடுவார்  என காங்கிரஸ் மந்திரி ஒருவர் கூறினார். குஜராத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததில் இருந்து சி.பி.ஐ.வைத் தடுக்க நாங்கள் ஒரு சட்டத்தை உருவாக்கவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள்  மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தி அயோத்தி வழக்கை அதன் வக்கீல்கள் மூலம் தடுக்க முயல்கிறது. ஒவ்வொரு விவகாரத்திலும்  நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்வது என்ன வகையான மன நிலை. 

இந்திய அரசியலின் வரலாற்றில் "மகாகத்பந்தன்" என்ற பெயரில் ஒரு தோல்வியுற்ற பரிசோதனையை பிரசுரிக்க ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. அவர்கள் ஒரு வலிமையற்ற அரசை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஒரு வலிமையான அரசை உருவாக்க விரும்பவில்லை, மீண்டும் தங்கள் கடைகளை மூட வேண்டும் என கூறினார்.

Next Story