இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி - ராகுல்காந்தி டுவிட்


இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி - ராகுல்காந்தி டுவிட்
x
தினத்தந்தி 12 Jan 2019 3:40 PM GMT (Updated: 12 Jan 2019 4:04 PM GMT)

இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய அரபு குடியரசுக்கு 2 நாள்கள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்றுள்ளார்.  நேற்று முன்தினம் துபாய் சென்ற அவருக்கு இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அரபு நாட்டில் உள்ள இந்திய வம்சாவளி வர்த்தகர்களை ராகுல் சந்திந்து பேசினார். இந்நிலையில், நேற்று  துபாயில் உள்ள தொழிலாளர் காலனியில் இந்திய தொழிலாளர்களிடையே அவர் உரையாற்றினார். 

இந்தியாவில் விரைவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். இந்தியாவை சேர்ந்த நீங்கள் கடுமையாக உழைத்து இந்த துபாய் நகரத்தை உருவாக்கியுள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் 2019ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன் என உறுதி அளித்திருந்தேன். அதை நிறைவேற்றுவேன். 

இவ்வாறு ராகுல் பேசினார்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு நாடுகளின் கலாச்சாரம், இளைஞர் நலம், சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ஷேக் நயம் பின் முபாரக் அல் நயனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் மதிய உணவை உட்கொண்டேன். இந்தியாவின் உண்மையான நண்பரான அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். அதேசமயம் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story