தேசிய செய்திகள்

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை + "||" + Pongal Festival Holidays in 6 districts in Kerala

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
பொங்கல் விழாவையொட்டி, கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கேரள மக்களின் கலாசாரம் பாரம்பரியத்துடன் இணைந்து வாழும் தமிழின மக்கள் கேரளாவில் ஓணம் உள்பட அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்த மாவட்டங்களுக்கு பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, பத்தனம்திட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு வாரம் தாமதம்: கேரளாவில் பருவ மழை தொடங்கியது
ஒரு வாரம் தாமதமான நிலையில், கேரளாவில் பருவ மழை நேற்று தொடங்கியது.
2. நிபா வைரஸ்: பயப்பட தேவையில்லை, அனைத்து உதவிகளையும் அளிக்கும்- மத்திய அரசு
நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. நிபா வைரஸ் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் - பினராயி விஜயன்
கேரளாவில் நிபா வைரஸ் நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
4. கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. ராகுல்காந்தி வயநாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் 7, 8 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.