தேசிய செய்திகள்

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல் + "||" + Acting as the puppet of the federal government: Corruption Monitoring Commissioner should be removed - Congress Of coercion

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல்

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கவேண்டும் - காங்கிரஸ் வற்புறுத்தல்
மத்திய அரசின் கைப்பாவையாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் செயல்படுகிறார் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் வற்புறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மா, தன்னை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை மீண்டும் பணியில் தொடர அனுமதித்தது. அதே நேரம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் விசாரணை அடிப்படையில் சி.பி.ஐ. இயக்குனரை நியமிக் கும் தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்வுக்குழு அவசரமாக கூடி அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்ற நாளில் அவரின் சி.பி.ஐ. இயக்குனர் பதவியை பறித்தது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்வுக்குழு கூறியது.

அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுதாரி தான் என்று காங்கிரஸ் கருதுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுதாரி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். அவர் மத்திய அரசின் தூதுவர் போலவும் செயல்படுகிறார்.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். ஊழல் கண்காணிப்பு ஆணையம் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டது என்பதையே அவர் மறந்து விட்டார். மேலும் ரபேல் போர் விமான ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவும் சவுதாரி மறுத்து வருகிறார்.

எனவே அவரை உடனடியாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமோ அல்லது மத்திய அரசோ உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
2. மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
3. தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கி இருக்கிறது அதிர்ச்சி தகவல்
தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவின் மரபு மற்றும் கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக பசு உள்ளது; பிரதமர் மோடி
இந்தியாவின் மரபு மற்றும் கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக பசு உள்ளது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
5. மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா - நேரில் சந்தித்து கனிமொழி ஆதரவு
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #MamataBanerjee #Kanimozhi

ஆசிரியரின் தேர்வுகள்...