தேசிய செய்திகள்

தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி + "||" + Best wishes on Pongal-Narendra Modi

தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள் என தமிழில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் வணக்கம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதே பொங்கல் வாழ்த்துப் பதிவை ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்தியில் மகரசங்கராந்தி வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்
யோகா, அனைத்துக்கும் மேலானது என்றும், அதை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
2. இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழு அமைப்பு
ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.
5. பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...