அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் -சமாஜ்வாதி எம்.எல்.ஏ தாக்கு


அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் -சமாஜ்வாதி எம்.எல்.ஏ தாக்கு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:31 AM GMT (Updated: 14 Jan 2019 10:31 AM GMT)

அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நீடிக்கும் என சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரிம் யாதவ் கூறி உள்ளார்.

லக்னோ,

பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும், உத்தரபிரதேசத்தில் முற்றிலும் துடைத்தெறியப்படும் என ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், லாலு பிரசாத்தின் மகனும், கட்சி நிர்வாகியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி கட்சியும் பகுஜன் சாமஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன..

அதன்படி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் தங்கள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்து உள்ளனர்.

இந்த கூட்டணி குறித்து சமாஜ் வாதி  கட்சி சிரிசாகஞ்ச் எம்.எல்.ஏ  ஹரிம் யாதவ் கூறும்போது,

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ்  கூட்டணி பிரோசாபாத்தில் எடுபடாது. இந்த கூட்டணி இங்கு வெற்றி பெறாது. மாயாவதி என்ன சொன்னாலும் அகிலேஷ் கேட்கிறார். எங்கள் தலைவர் (அகிலேஷ் யாதவ்) பெகன்ஜி (மாயாவதி) அவரது முன்னால் மண்டியிடும் வரை மட்டுமே இந்த கூட்டணி நிலைக்கும் என கூறினார்.


Next Story