கேரளாவில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு


கேரளாவில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
x
தினத்தந்தி 14 Jan 2019 11:44 AM GMT (Updated: 14 Jan 2019 12:15 PM GMT)

கேரளாவில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனை காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனையடுத்து அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.

இந்த பூஜையையொட்டி, கடந்த ஆண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தை ஒப்பிடும்பொழுது இந்த வருடம் அய்யப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் சபரிமலைக்கு இன்று வருவார்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

Next Story