தேசிய செய்திகள்

கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது + "||" + Magara jodhi was seen in the Ponnambalamedu in Sabarimalai in Kerala

கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது

கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது
கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதியை பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.  இதனையடுத்து அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.

இந்த பூஜையையொட்டி, கடந்த ஆண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தை ஒப்பிடும்பொழுது இந்த வருடம் அய்யப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் சபரிமலைக்கு இன்று வருவார்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, போக்குவரத்தை சீர்படுத்துவது, காணாமல் போகும் நபர்களை மீட்பது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பது, திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது.  இந்த நிலையில், சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது.  இதனை அடுத்து சரண கோஷம் எழுப்பியபடி அய்யப்ப பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி
மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.
2. திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
திருமானூர் அருகே புதுக்கோட்டை மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.