கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு + "||" + Donkey milk soaps grab eyeballs at organic festival in Chandigarh
கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு
கழுதை பாலில் தயாரிக்கப்பட்டு ரூ.500க்கு விற்கப்படும் குளியல் சோப்பிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சண்டிகார்,
சண்டிகாரில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இதனை மத்திய மந்திரி மேனகா காந்தி தொடங்கி வைத்துள்ளார். இங்கு கழுதை பாலில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளியல் சோப்பிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 100 கிராம் கொண்ட ஒரு சோப்பு ரூ.499க்கு விற்கப்படுகிறது.
இதுபற்றி சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான பூஜா கவுல் கூறும்பொழுது, கழுதை பாலுக்கு பல மருத்துவ பண்புகள் உள்ளன. இது வயது முதிர்வு, தோல் சுருங்குதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும் பண்புகளை கொண்டதுடன் பாக்டீரிய தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
இந்த கழுதை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதிலுள்ள மருத்துவ பண்புகளால் மிக அதிக விலை கொண்டுள்ளது.
எங்களது தயாரிப்புகளுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய தென்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அவர்கள் கழுதை பாலின் பலன்களை பற்றி நன்றாக தெரிந்து வைத்து உள்ளனர் என கூறியுள்ளார்.