தேசிய செய்திகள்

ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல் + "||" + 2 young women in Odisha are married If we try to separate ourselves to threaten to commit suicide

ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்

ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சபித்ரி பரிடா (வயது 27), மோனலிசா நாயக் (28) ஆகிய 2 பெண்கள் வேலைபார்த்து வந்தனர்.

கட்டாக்,

கல்லூரி படிக்கும் போதே தோழிகளாக இருந்த இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இணைபிரியா தோழிகளான இருவரும் கட்டாக்கில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்து உள்ளது. இதையடுத்து சபித்ரியும், மோனலிசாவும் அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

இதை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...