தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் + "||" + Prime Minister Modi today visited Kerala

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விதமாக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணங்களை தொடங்கி உள்ளார். அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கேரளாவின் கொல்லத்தில் ரூ.352 கோடி மதிப்பில் 13 கி.மீ. தூர புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இந்த சாலையை திறந்துவைக்கிறார். கொல்லத்துக்கு பிரதமர் மோடி வருவது இது 3–வது முறையாகும்.

மேலும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கும் செல்லும் பிரதமர், அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கும் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு வசதிகளை அவர் தொடங்கி வைப்பார் என தெரிகிறது.

இதைப்போல ஒடிசாவிலும் அவர் புதிய ரெயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
2. பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது
பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
4. மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
புல்வமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மாபெரும் தவறை செய்து விட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. பிப்.21 ல் அரசுமுறைப் பயணமாக தென்கொரியா செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார்.