உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள் -மெகபூபா முப்தி


உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள் -மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 16 Jan 2019 5:18 AM GMT (Updated: 16 Jan 2019 5:18 AM GMT)

உள்ளூர் போராளிகள் இந்த மண்ணின் மைந்தர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறி உள்ளார்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் நடந்த மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான மெகபூபா முப்தி  நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானுடனும், பிரிவினைவாதிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.  இதேபோல், போர்க்குணம் கொண்ட துப்பாக்கி வைத்திருக்கும்  தலைவர்களிடம் கூட பேச வேண்டும். துப்பாக்கி கலாச்சாரம் முடிவடைய இது ஒன்றே சிறந்த வழி.

பேச்சுவார்த்தைகள் ஹூரியத்  மாநாடு மற்றும் போராளிகளுடன் நடத்தப்பட வேண்டும் என சில கட்டங்களில் நான் நம்புகிறேன். வெகு சீக்கிரமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

உள்ளூர் போராளிகள்  வன்முறை பாதையில் நடைபோடுவதை  தடுக்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்தது முதல்,  உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள்  என்று நான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். ஏனெனில் அவர்கள் மண்ணின் சொத்துக்கள் அவர்களை  காப்பாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சிகள் இருக்க வேண்டும்.

"ஒரு மோதல் வெடித்தால், இருவரும் (போராளிகளும் பாதுகாப்பு படையினரும்) நேருக்கு நேர் சந்தித்து வருகிறார்கள். யாரும் அது குறித்து எதுவும் செய்ய முடியாது," என கூறினார்.

Next Story