தேசிய செய்திகள்

குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி + "||" + Woman falls from terrace after monkey attack, dies

குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி

குரங்குகளிடம் இருந்து  தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த  மாமியார் - மருமகள்  ; மாமியார் பலி
குரங்குகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற மாமியார் வீட்டு பால்கனியில் இருந்து விழுந்து பலியானார். மருமகள் பலத்த காயம் அடைந்துள்ளார்.
பல்ராம்பூர்,

உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் மதுரா பஜார் பகுதியில் சாவித்திரி தேவி (வயது 60) என்ற பெண் வசித்து வந்துள்ளார்.  இவரும் இவரது மருமகள் ரேணுவும் தங்களது வீட்டின் மேல்தளத்தில் இருந்த பால்கனியில் அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வந்த சில குரங்குகள் அவர்களை தாக்க தொடங்கியுள்ளன.  இதனால் பயந்து போன அவர்கள் தங்களை காத்து கொள்வதற்காக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில், சாவித்திரி தேவி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.  அவரது மருமகள் ரேணு பலத்த காயமடைந்து உள்ளார்.  அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...