சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்


சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
x
தினத்தந்தி 16 Jan 2019 3:56 PM GMT (Updated: 16 Jan 2019 3:56 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நியமனத்திற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  புதிதாக நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகளோடு சேர்த்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Next Story