தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார் + "||" + Arun Jaitley went to America for medical examination

மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார்

மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார்
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி மந்திரியுமாக இருப்பவர் அருண் ஜெட்லி (வயது 66).

புதுடெல்லி, 

அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இவரிடம் இருந்த நிதித்துறை, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்நிலை சரியானதும் மீண்டும் நிதித்துறை பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 13–ந் தேதி இரவு மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி திடீரென அமெரிக்கா சென்றார். பரிசோதனைகள் முடிந்து அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. வருகிற (பிப்ரவரி) 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் அவர் அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்
உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
2. ‘‘கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும்’’ அருண் ஜெட்லி நம்பிக்கை
கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு
இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
4. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை -அருண் ஜெட்லி விமர்சனம்
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்று அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.
5. அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை - அருண் ஜெட்லி
அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது என நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.