தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் + "||" + Pak voilate ceasefire in Jk poonch sector

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது.
பூன்ச்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் செக்டாரில் உள்ள  நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. 

முன்னதாக, நவ்ஷ்ரா மற்றும் சுந்தேர்பனி ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு துணைத்தூதரை நேரில் அழைத்து இந்தியா நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தது. கடந்த ஜனவரி 11-ஆம் தேதி எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த  ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு ஜவான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். 

”பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு நமது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளோம்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இந்தியா- பாகிஸ்தான் இடையே  2003-ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் 2,936 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் 2018-ம் ஆண்டு தான் இவ்வளவு அதிகமாக தாக்குதல் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
2. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.
3. இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
4. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு
இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார்.