தேசிய செய்திகள்

சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல் + "||" + Jammu-Delhi Duronto Express passengers robbed at knifepoint

சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்

சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்
சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து 15 நிமிடங்களில் பயணிகளிடம் கொள்ளை அடித்து கும்பல் ஒன்று தப்பி சென்றது.
புதுடெல்லி,

ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.  இந்த நிலையில் டெல்லி ரோஹில்லா ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபொழுது, இன்று அதிகாலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பயணிகளிடம் கொள்ளை அடித்துள்ளனர்.

இதுபற்றி அஷ்வனி குமார் என்ற பயணி புகார் தெரிவிக்கும் ரெயில்வே வலைதளம் வழியே தெரிவித்துள்ள புகாரில், 7 முதல் 10 மர்ம நபர்கள் அதிகாலை 3.30 மணியளவில் சிக்னலுக்காக காத்திருந்த ரெயிலின் பி3 மற்றும் பி7 ஆகிய ரெயில் பெட்டிகளுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் பயணிகளிடம் இருந்து பர்ஸ், பணம், தங்க நகைகள், மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.  ரெயில் நின்ற 10 முதல் 15 நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
ரூ.4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கும்பல் ஒன்று கடத்தி சென்றது.
2. வைரங்களுக்காக 1,000 கிலோ நந்தி சிலையை திருடி சென்ற கும்பல்
ஆந்திர பிரதேசத்தில் வைரங்களுக்காக 1,000 கிலோ நந்தி சிலையை திருடி சென்ற 15 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
3. கூகுள் மேப் உதவியுடன் 11 கோவில்களில் கொள்ளை அடித்த கும்பல்
கர்நாடகாவில் கூகுள் மேப் உதவியுடன் 11 கோவில்களில் கும்பல் ஒன்று கொள்ளை அடித்து சென்றுள்ளது.
4. டெல்லி-பாகல்பூர் எக்ஸ்பிரெசின் சங்கிலியை இரவில் இழுத்து நிறுத்தி கொள்ளை அடித்த கும்பல்
டெல்லி-பாகல்பூர் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் இரவில் சங்கிலியை இழுத்து நிறுத்தி பயணிகளின் விலை மதிப்புள்ள பொருட்களை கும்பல் ஒன்று கொள்ளை அடித்து சென்றது.