நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு


நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 17 Jan 2019 8:27 AM GMT (Updated: 17 Jan 2019 8:27 AM GMT)

மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சில சட்ட பிரிவுகளை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து உள்ளது.

புதுடெல்லி,

மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  இதில், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் பார் அறைகளில் ஆபாச நடனம் மற்றும் மகளிர் கண்ணியம் பாதுகாப்பு (பணியில் இருப்போர்) சட்டம், 2016-ன் சில பிரிவுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சி.சி.டி.வி.க்களை கட்டாயம் நிறுவும் சட்ட பிரிவு, பார் அறைகள் மற்றும் நடன தளங்களுக்கு இடையே தடுப்பு இருப்பது கட்டாயம் என்ற சட்ட பிரிவு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று நடனம் ஆடும் பெண்களுக்கு டிப்ஸ் (பணம்) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  ஆனால் நடன பார்களில் பெண்கள் மீது கரன்சி நோட்டுகளை மழை போல் பொழிவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதனுடன் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவை கடந்து நடன பார்கள் அமைய வேண்டும் என்ற கட்டாய பிரிவு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடன பார்கள் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரையே செயல்படலாம் என்று வழங்கப்பட்டு இருந்த அனுமதியை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

Next Story