தேசிய செய்திகள்

செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது + "||" + Canadian woman molested at 5-star hotel in Mumbai

செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது

செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது
செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த 5 நட்சத்திர ஓட்டல் பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

மும்பை நகரில் ஜுகு பகுதியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்து உள்ளது.  இங்கு கனடா நாட்டை சேர்ந்த 35 வயது நிறைந்த பெண் ஒருவர் வந்து தங்கியுள்ளார். அந்த பெண் நிகழ்ச்சி மேலாண்மை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக அடிக்கடி இந்தியா வந்து செல்வார்.

இந்த ஓட்டலில் சுமித் ராவ் (வயது 32) என்ற பணியாளர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கனடா நாட்டு பெண், போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.  அதில், ஓட்டல் அறையில் தங்கி இருந்த என்னிடம் வந்து ஓட்டல் பணியாளர் செஃல்பி எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார். ஆனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்து உள்ளார்.

இந்த தகவலை ஓட்டல் நிர்வாகத்திடம் கொண்டு சென்ற அந்த பெண் பின்னர் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து போலீசார் 354 மற்றும் 354 (டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டல் பணியாளரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.