தேசிய செய்திகள்

சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு + "||" + Behind KCRs Federal Front Chandrababu Naidu sees a PM Modi imprint

சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு

சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
அமராவதி,

2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவு வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியது கூட்டணி குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் தொண்டர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியதை விமர்சனம் செய்தார். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் உண்மை நிலை இப்போது வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மோடியின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வருகிறார்கள். மூன்றாவது கூட்டணி என்பதற்கு பின்னால் பிரதமர் மோடியின் மூளை வேலை செய்கிறது, ஆந்திராவில் பா.ஜனதாவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் மூன்றாவது கூட்டணிக்கு பிற கட்சிகளிடம் இருந்து வெளிப்படையான, ஸ்திரமான பதில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்தார்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சந்திரபாபு நாயுடு முடித்துக்கொண்டார்.
2. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
3. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
4. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறினார்.
5. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது.