டெல்லியில் கடும் பனிமூட்டம், ரயில், விமான சேவைகள் பாதிப்பு


டெல்லியில் கடும் பனிமூட்டம், ரயில், விமான சேவைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 4:08 AM GMT (Updated: 18 Jan 2019 4:08 AM GMT)

டெல்லியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால், விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். காலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் விமான புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.  விமான வருகையும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டது. அதேபோல், 10க்கும் மேற்பட்ட ரயில்களும் தாமதம் ஆகியுள்ளன. 

மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் இரண்டு தினங்களுக்கு மிக கடுமையான அடர் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் பனிமூட்டம் சிறிது குறைந்து காணப்பட்டது. கும்பமேளா நடந்து வரும் இந்த நகரில், பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது  புனித நீராடினர். 

Next Story