லடாக் பனிச்சரிவில் கார் சிக்கியது: ஒருவர் பலி, 9 பேரை மீட்கும் பணி தீவிரம்


லடாக் பனிச்சரிவில் கார் சிக்கியது:  ஒருவர் பலி, 9 பேரை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Jan 2019 7:00 AM GMT (Updated: 18 Jan 2019 7:00 AM GMT)

லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் காரில் சென்ற 10 பேர் சிக்கினர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் லடாக் மாவட்டத்தில் உள்ள ஷைக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு பகுதிகளை இணைக்கும் மிக உயரமான மலைப்பகுதி சாலை உள்ளது. இந்த வழியாக 10 பேருடன் சென்ற ஸ்கார்பியோ கார்  கார்துக் லா பாஸ் என்ற இடத்தில், பனிச்சரிவில் சிக்கியது.

பனிச்சரிவு காரை முழுவதுமாக மூழ்கடித்ததால், காரில் பயணித்த அனைவரும் சிக்கிக் கொண்டனர். பனிச்சரிவில் சிக்கிய காரை விரைந்து வந்து மீட்கும் பணியை மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து மேற்கொண்டனர். இதில், ஒருவரது உடல் இறந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளது. ஏனைய  9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story