தேசிய செய்திகள்

மக்களுடைய டேட்டா எண்ணை வளம் போன்றது -முகேஷ் அம்பானி + "||" + Reliance to invest Rs 3 lakh cr in Gujarat in next 10 years: Mukesh Ambani

மக்களுடைய டேட்டா எண்ணை வளம் போன்றது -முகேஷ் அம்பானி

மக்களுடைய டேட்டா எண்ணை வளம் போன்றது -முகேஷ் அம்பானி
மக்களுடைய டேட்டா என்பது எண்ணை வளம் போன்றது. அதனை இந்தியா கட்டுப்படுத்தக் கூடாது என குஜராத் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசினார்.
புதுடெல்லி

குஜராத் மாநிலம் மகாத்மா மந்திர் சந்திப்பில் ஒன்பதாவது  குஜராத் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி வரவேற்று பேசினார்.

உஸ்பெகிஸ்தான் மற்றும் ருவாண்டா அதிபர்கள் ஷாவத் மிர்ஜியோவ் மற்றும் பால் ககாமி ஆகிய தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியுடன் இருவரும் அமர்ந்து உள்ளனர். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மாநாட்டில் அரசியல் தலைவர்கள் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, தீபக் பரிக், சந்திர சேகரன், உதய் கோடக், கேஎம். பிர்லா, பிகே கோயங்கா உள்பட பல கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசும்போது கூறியதாவது:-

குஜராத் ரிலையன்ஸ் பிறந்த இடமாகும் (ஜன்மபூமி) மற்றும் பணியிடமாக (கர்மபூமி ) உள்ளது. குஜராத் எப்போதும் எங்களின் முதல் தேர்வாக இருக்கும். இதுவரை குஜராத் மாநிலத்தில் 3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். மேலும் குஜராத்தில் 10 லட்சம்  வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்தி உள்ளோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை ரிலையன்ஸ் இரட்டிப்பாக்கும்.

ஜியோ நெட்வொர்க்கில் இப்போது முழுமையாக 5G தயாராக உள்ளது. தொலை தொடர்பு மற்றும் சில்லறை பிரிவு வாடிக்கையாளர்கள் சிறிய சில்லறை மற்றும் கடைக்காரர்களை இணைக்க ஒரு புதிய வர்த்தக தளம் தொடங்க வேண்டும். இந்த புதிய உலகில், மக்களுடைய தகவல்கள் புதிய எண்ணெய் ஆகும். டேட்டா புதிய செல்வம். இந்தியாவின் டேட்டா கட்டுப்படுத்த வேண்டும். அது இந்திய மக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும், மாறாக பெருநிறுவனங்களாலும், குறிப்பாக உலக நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட கூடாது. இந்த தரவு இயக்கப்படும் புரட்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.