தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல் + "||" + Karnataka Congress united intact, says Siddaramaiah amid rebellion crisis

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மூன்று பேர் கலந்து கொள்ளவில்லை; பா.ஜனதா மீது சித்தராமையா சாடல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.  இதற்கிடையே கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர் மற்றும் நாகேஷ் கடந்த 15-ந் தேதி தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கூட்டணி அரசை காப்பாற்றவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையொட்டி அவர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தவும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்தனர். அதன்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து சித்தராமையா பேசுகையில், 76 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுக்கப்படும். பின்னர் உயர்மட்ட தலைவர்களிடம் பேசுவேன். கர்நாடகாவில் எங்களுடைய அரசை கவிழ்க்க பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை தொடர்பு  கொண்டு வருகிறார்கள், ரூ. 50, 70 கோடி கொடுப்பதாக கூறுகிறார்கள். என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உ.பி.யில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு
தேர்தல் தோல்வி எதிரொலியாக கர்நாடகாவை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
2. ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடித்தால்தான் காங்கிரஸ் முன்னேறும் - முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய்
ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடித்தால்தான் காங்கிரஸ் முன்னேறும் என முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
3. காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை- பாஜக முடிவு
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
4. காங்கிரசில் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும் - வீரப்ப மொய்லி பேட்டி
காங்கிரசில் நிலவும் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.
5. மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா
மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...