தேசிய செய்திகள்

காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி + "||" + Kashmir: 5 workers killed in snow fall

காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி

காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் லடாக்கின் கர்துங் லா பகுதியில் உள்ள உலகத்திலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட சாலையில் ஒரு வாகனத்தில் 10 தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வாகனத்தில் சென்ற அனைவரும் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர்.


இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்ற 5 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு -5 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிகுண்டு தயாரித்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.
5. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.