தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு + "||" + 2 new judges sworn in Supreme Court

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் பதவியேற்றனர்.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியமானது, கடந்த 10–ந் தேதி அன்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, மற்றும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் அடிப்படையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
2. கவர்னருக்கு அதிகாரமில்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளது - நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி கவர்னருக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. 8 வழிச்சாலை திட்டம்; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
8 வழிச்சாலை திட்டம் பற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
4. சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு விமானப்படையின் தயார் நிலையை பாதிக்கும் : ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனு
ரபேல் விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.