தேசிய செய்திகள்

பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா + "||" + India, Pak should engage in 'meaningful dialogue' to resolve their issues: UN chief

பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா

பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அர்த்தமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தலைவர் அண்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். 

நியூயார்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அண்டோனியோ கட்டர்ஸ் கூறியதாவது:- “ இந்தியாவும் பாகிஸ்தானும் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு  உதவ நான்  தயாராக உள்ளேன்” என்றார்.

காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கட்டர்ஸ், மனித உரிமை மீறல்கள் விவகாரத்தை பொறுத்தவரை, மனித உரிமைக்கான துணைத்தூதர் சமீபத்தில் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில்  ஐநா செயல்படும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
2. உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான நீர் இல்லை: ஐநா பகீர் தகவல்
உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்று ஐநா வெளியிட்டுள்ள தகவல் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
3. பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு
இன்ஜமாம் உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
4. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடிக்கும்
அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...