தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர் + "||" + After 14 years of living-in, Jharkhand tribal couple gets support for wedding

ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்

ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்
ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். அப்படி, ராம்லால் முண்டா என்ற நபரும் ஷகோரி என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 30 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் மகன் ஜித்தீஷ்வர் என்பவரும் கடந்த இரண்டாண்டுகளாக அருணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிமிட்டா (NIMMITA) என்ற தொண்டு நிறுவனம் இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்த முடிவு செய்தது.

அதன்படி ஒரே நேரத்தில் 132 பழங்குடி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் ராம்லால் - ஷகோரி தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஜித்தீஷ்வர் - அருணா திருமணமும் அடக்கம். இதன்மூலம் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இது குறித்து ஜித்தீஷ்வர் கூறுகையில், நிதி பிரச்சினையால் தான் என் தந்தை எனது தாயை திருமணம் செய்து கொள்ளவில்லை, நானும் அதனால் தான் அருணாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தேன். தற்போது திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை செய்து கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி: வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பரிதாபம்
அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலியாகினர். வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
3. ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்றது
ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
4. கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்
கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு
ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...