தேசிய செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு - சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல் + "||" + 67,000 cases filed in Sabarimala case - Kerala police file a report in Supreme Court

சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு - சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல்

சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு - சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல்
சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கில், கேரள போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த அறிக்கையில், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை 67 ஆயிரத்து 94 பேர் மீது 2,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 561 பேர் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளையும், மத அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
2. சபரிமலையில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பாரம்பரியம் சார்ந்தது, அது தீண்டாமை அல்ல -சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
சபரிமலையில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பாரம்பரியம் சார்ந்தது, அது தீண்டாமை அல்ல என சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டு வருகிறது.
3. சபரிமலை விவகாரம்: 48 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உட்பட பல்வேறு தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தொடங்கியது.
4. இன்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்கள் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
5. தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் உள்பட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் உள்பட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தகவல் தெரிவித்து உள்ளது.