தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து + "||" + Massive fire at five-storey building in south Kolkata

கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரிஹட் என்ற இடத்தில் ஐந்து மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின்  தரை தளம் மற்றும் முதல் தளத்தில், துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. 

இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரெனெ இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதையடுத்து, தீ அணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 16 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தும் ஏற்பட்டதும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். 

தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. எனினும்,  குடோனில் இருந்து சரக்குகள் தீக்கிரையாகின. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
2. மேற்கு வங்காளம்: தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி
மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. கனடாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு - சிரியா அகதிகளுக்கு நேர்ந்த சோகம்
கனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
4. டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
5. டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.