சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்


சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான்:  விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2019 7:39 AM GMT (Updated: 20 Jan 2019 7:39 AM GMT)

சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள  சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்திருந்தனர்.

அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு, சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது.

அதை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோதும், அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அந்த அறிக்கை விவரங்கள் தற்போது கசிந்துள்ளன. 

அதில் சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மேலும், சசிகலா சிறையில் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன. என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story