தேசிய செய்திகள்

ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சிகள் குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + RSS-BJP training goons to make bombs: MP Congress minister Govind Singh

ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சிகள் குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சிகள் குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சி குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது என குற்றஞ்சாட்டி உள்ளார்.
போபால்

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு படுகொலைகள் பற்றி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எழுப்பிய  கேள்விக்கு பதில் அளித்த மத்திய பிரதேச கூட்டுறவு அமைச்சர் கோவிந்த் சிங், மாநிலத்தில்  நடக்கும் குற்றச்செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.தான் காரணம். கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களை செய்ய மக்களை இந்த கட்சிகள்  ஊக்குவித்து வருகின்றன.  

கடந்த 15 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை தயாரிக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் பயிற்றுவிக்கப்பட்ட  குற்றவாளிகள்  தற்போது  ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். பாஜக  விஷம் நிறைந்த மரங்களை வளர்த்து விட்டுள்ளது. இப்போது நாம் அதனை பிடுங்குவோம் என கூறி உள்ளார்.

இதற்கு பதில் அளித்த பாரதீய ஜனதா, காங்கிரசுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.

முதல் மந்திரி  கமல்நாத் ஜியின் மந்திரி டாக்டர் கோவிந்த் சிங் கருத்து மிகவும்  அபத்தமானது மற்றும் அறியாமைக்கு அடையாளமாக உள்ளது  என முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும். என்னுடைய தலையீடு இருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு
மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
4. 2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி புதிய திட்டத்தை தீட்டியுள்ளார்.
5. முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...