தேசிய செய்திகள்

வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி + "||" + Cannibalism a new threat! Tiger eats tigress in Madhya Pradesh

வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி

வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி
மத்திய பிரதேச தேசிய பூங்காவில் பெண் புலி ஒன்றை ஆண் புலி கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போபால்

இந்தியாவிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் மாநிலம் மத்திய பிரதேசம். கடந்த 1995-ம் ஆண்டு ‘புலிகள் மாநிலம்’ என்ற பட்டத்தைப் பெற்றது. உலகளவில் 10  சதவீத புலிகளும், இந்திய அளவில் 20 சதவீத புலிகளும் மத்திய பிரதேசத்தில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் ஏராளமான விலங்குகளுடன், புலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த பூங்காவின் வனத்துறை காவலர்கள் ரோந்து பயணம் சென்றுள்ளனர். அப்போது புலியின் எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தக் கரைகளுடன் சிதறிக் கிடந்துள்ளன. அதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இறந்து கிடந்தது  பெண் புலி என்றும்  ஆண் புலி  ஒன்று அதனை கொன்று தின்றுள்ளது தெரிய வந்தது.

இது முற்றிலும் விநோதமான சம்பவம் என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக புலிக்குட்டிகளை புலியே உண்ணும் சம்பவங்கள் நடக்கும். அது இயல்பான ஒன்றாகும். ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு பெரிய புலி உண்டது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் உலகில் எங்கும் இப்படி ஒரு விநோத சம்பவம் நிகழ்ந்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் புலியை கொன்ற ஆண் புலிக்கு அவ்வப்போது போதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அது இப்படி ஒரு செயலை செய்துள்ளது விநோதமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவேளை குறுகிய இடங்களுக்குள் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இறந்து கிடந்த பெண் புலியின் உடல் பாகங்களை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள், அதனை மேற்கொண்டு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலி
மத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
2. மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.
3. வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு கன்னத்தில் 168 அறை-ஆசிரியர் கைது
மத்தியபிரதேசத்தில், மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழப்பு, போலீஸ் விசாரணை
காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
5. மத்தியபிரதேசத்தில் உள்ளூர் இளைஞர்களுக்காக 70 சதவீத வேலை வாய்ப்பு - அரசு உத்தரவு
மத்திய பிரதேச முதல்–மந்திரியாக பதவியேற்ற கமல்நாத் அந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...