தேசிய செய்திகள்

குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது + "||" + During occult rituals, newborn buried alive in UP to save family members

குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது

குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது
குடும்பத்தினரை காக்க குழந்தையை உயிருடன் குழியில் புதைத்ததற்காக சூனியக்காரர், தந்தை கைது செய்யப்பட்டனர்.
ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புரைனா கிராம பகுதி அருகே குழி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் சந்தேகத்தின்பேரில் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.  அதன்பின் உடனடியாக குழிக்குள் இருந்த ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர்.

இதனை தொடர்ந்து குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இதுபற்றி குழந்தையின் தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவரது உறவினர் ஒருவர் குழந்தையை சூனியக்காரர் ஒருவரிடம் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அந்த சூனியக்காரர், குடும்பத்தில் மற்றவர்களுக்கு எதுவும் நேர்ந்து விடாமல் காத்து கொள்ளும் வகையில் குழந்தையை குழிக்குள் புதைத்து விடவும் என அறிவுரை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை,  சூனியக்காரர் மற்றும் குழந்தையின் அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயி கைது
வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
2. காதலியுடன் காட்டுப்பகுதியில் சென்றபோது தகராறு: என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
காதலியுடன் காட்டுப் பகுதியில் சென்ற என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
புதுக்கோட்டைவிசைப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
4. வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
5. சாமி ஊர்வலத்தின்போது தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 3 பேர் கைது
திருவெண்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.