தேசிய செய்திகள்

ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள் + "||" + sisters pretend to be boys to keep barbershop

ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்

ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்
ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகளை அரசு பாராட்டி கவுரவித்து உள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்  துருவ் நாராயணன்.  இவருக்கு இரு மகள்கள் ஜோதி குமாரி (18) மற்றும் நேகா (16). சலூன் நடத்தி வந்த நாராயணனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. 2014-ல் அவர் படுத்த படுக்கையானார்.

சலூனைத் தவிர அவர்களுக்குச் சொத்து எதுவும் இல்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மகள்கள் இருவரும் சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தனர். ஆனால் அதற்கும் பிரச்சினை வந்தது.

இளம் பெண்களிடம்  தாடியை எடுக்கவும்,  மீசையை எடுக்கவும், முடிவெட்டிகொள்ளவும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் தயங்கினர். சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். இதனால் தங்களின் கெட்டப்பை மாற்ற சகோதரிகள் இருவரும் முடிவு செய்தனர். தலைமுடியை கிராப் வெட்டிக் கொண்டனர். கையில் ஆண்களைப் போல காப்பு போட்டுக்கொண்டனர். தீபக், ராஜு என்று ஆண் பெயரை வைத்துக் கொண்டனர்.

அவர்களின் கிராமத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவர்களைப் பற்றித் தெரிந்தே இருந்தது. ஆனால் சில ஆண்டுகளில் பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்த வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

இருவரும் சேர்ந்து தினந்தோறும் குறைந்தது 400 ரூபாய் சம்பாதித்தனர். அது தந்தையின் மருத்துவத்துக்கும் குடும்பச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, மதியத்துக்கு மேல் இருவரும் கடையைத் திறப்பர். ஜோதி இப்போது பட்டதாரி ஆகிவிட்டார். நேகா இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்துப் கூறிய நேகா, ''ஆரம்பத்தில் கிராமத்தில் சிலரே எங்களைக் கிண்டலடிப்பர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினோம். ஏனென்றால் அப்போது எங்களுக்கு வேறு வழியில்லை.

ஆனால் இப்போது எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல எங்களுடைய நிஜ அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தினோம். பெரும்பாலானோர் எங்களைப் புரிந்துகொண்டனர்.

அக்கா (ஜோதி) மீண்டும் தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் என்னைப் பார்த்தால் இப்போது கூட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது'' என்று கூறினார். 

இவர்களைப் பற்றி கோரக்பூரில் உள்ள இந்தி செய்தித்தாளில் செய்தி வர, சகோதரிகளை அரசு அதிகாரிகள் அழைத்து கவுரவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.
2. உத்தரபிரதேசத்தில் கார் விபத்து: தாஜ்மகாலை பார்க்க சென்ற 8 பேர் சாவு
உத்தரபிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் தாஜ்மகாலை பார்க்க சென்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
3. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை
மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை தந்தையொருவர் கத்தியால் குத்திய சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.
4. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில், பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. உ.பி.யில் பயங்கரம்: இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகரில் இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...