காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் - நிதின் கட்காரி


காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 21 Jan 2019 3:25 PM GMT (Updated: 21 Jan 2019 3:25 PM GMT)

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார்.


அமராவதி, 

 அமராவதியில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, கோதாவரியில் ஆண்டுதோறும் 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. எனவே கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்திற்கு  கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.  இதனால் பணச்செலவு குறையும். 

இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திர மாநில பொறியாளர் பரிந்துரைத்துள்ளார். கோதாவரி–கிருஷ்ணா–பெண்ணார்–காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது.  இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 


Next Story