கைவிடப்பட்ட, அநாதை குழந்தைகள் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு முதலிடம்


கைவிடப்பட்ட, அநாதை குழந்தைகள் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு முதலிடம்
x
தினத்தந்தி 21 Jan 2019 3:48 PM GMT (Updated: 21 Jan 2019 3:48 PM GMT)

கைவிடப்பட்ட, அநாதை குழந்தைகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என புதிய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த 2016-17ம் ஆண்டு கணக்கின்படி குழந்தைகள் நல காப்பகத்தில் மொத்தம் 1.8 லட்ச குழந்தைகள் வசித்து வருகின்றனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

இந்த குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் அவர்களை கவனித்து கொள்ள முடியவில்லை.  இவர்களில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5,290 பேரும், 7-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 885 பேரும் உள்ளனர்.

இதேபோன்று 0-6 வயதுக்குட்பட்ட 5,931 குழந்தைகள் (2,966 அநாதை குழந்தைகள், 1,763 கைவிடப்பட்ட குழந்தைகள், 1,209 சரணடைந்தோர்) மற்றும் 7-18 வயதுக்குட்பட்ட 50,267 குழந்தைகளும் உள்ளனர் என அறிக்கை தெரிவித்துள்ளது.

இவர்களில் 38,765 பேர் அநாதை குழந்தைகள்.  இந்த எண்ணிக்கையில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா இணைந்து 10,745 (27.7 சதவீதம்) ஆக உள்ளது.

இதனுடன் இந்த வயதில் கைவிடப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையில் தமிழகம் (1,326) முதல் இடத்தில் உள்ளது என தெரிய வந்துள்ளது.

Next Story