ஜனாதிபதி ஆட்சியை காட்டி மிரட்டுவதாக மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்


ஜனாதிபதி ஆட்சியை காட்டி மிரட்டுவதாக மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்
x
தினத்தந்தி 21 Jan 2019 6:30 PM GMT (Updated: 21 Jan 2019 6:12 PM GMT)

ஜனாதிபதி ஆட்சியை காட்டி மிரட்டுவதாக, மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திராவின் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பிரதமர் மோடியை எதிர்மறை தலைவர் என்றும், அவரது தலைமையில் நாடு பின்னடைவை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ஆந்திராவுக்கு வாரந்தோறும் ஒரு மத்திய மந்திரி வருகிறார். ஆனால் மாநிலத்துக்காக என்ன நல்லது செய்திருக்கிறார்கள்? அனைத்துக்கும் மேலாக, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவோம் என மிரட்டல்தான் விடுக்கிறார்கள். ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் யாரும் அஞ்சமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டம், மத்திய சர்வாதிகார அரசின் முடிவின் தொடக்கம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, அதுபோன்ற ஒரு கூட்டம் அமராவதியிலும் நடத்தப்படும் எனவும், அதிலும் 22 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.


Next Story