தேசிய செய்திகள்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? -கரீனா கபூர் பதில் + "||" + Kareena Kapoor reacts to rumour about her joining politics

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? -கரீனா கபூர் பதில்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? -கரீனா கபூர் பதில்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? என்ற கேள்விக்கு கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் இந்தி நடிகை கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போபால் மக்களவைத் தொகுதியில் கரீனா கபூரை போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

காங்கிரஸ் தலைவர்கள் கவுடு சவுகான், அனீஸ் கான் பேசுகையில், போபால் தொகுதியில் ஸ்திரமாக காலூன்றியுள்ள பா.ஜனதாவை தோற்கடிக்க கருவியாக இந்நகர்வை முன்னெடுக்கலாம். கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் கரீனாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்றனர். இதற்கிடையே திரையுலகில் தனக்கான இடத்தில் ஸ்திரமாக இருக்கும் கரீனா கபூர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தேர்தலில் போட்டி என வந்த தகவலை மறுத்துள்ள கரீனா கபூர் “நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் திரையுலகில் மட்டுமே இருக்கிறது, அது அப்படியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.– பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் பேட்டி
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.
2. மாயாவதி, அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு அறிவிப்பு: மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளரை களமிறக்குகிறது
மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
3. 3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்
3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மோடியை குற்றஞ்சாட்டி உள்ளது.
4. ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோட்டில் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
5. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.