இவிஎம் ஹேக்: சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை -தகவல்கள்


இவிஎம் ஹேக்: சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை -தகவல்கள்
x
தினத்தந்தி 22 Jan 2019 2:58 PM GMT (Updated: 22 Jan 2019 2:58 PM GMT)

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டது என குற்றம் சாட்டிய சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா பேசுகையில், இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றது. அதற்கு பின்னர் டெல்லியை தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் மோசடி நடைபெற்றது என்றார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (இசிஐஎல்) நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் தானும், தன்னுடைய குழுவும் பணியாற்றியது. குழுவில் உள்ளவர்களே சில தேர்தல்களில் மோசடிகளை தடுத்தனர் என்றெல்லாம் சையது சுஜா கூறியிருந்தார். இந்நிலையில் சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

சையது சுஜாவோ அல்லது அவருடைய குழுவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களோ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் இசிஐஎல் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story