தேசிய செய்திகள்

வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி + "||" + ‘I used to live in a jungle alone for 5 days every year’: PM Modi

வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி

வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி
தனது இளமை காலம் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,

பேஸ்புக்கின் பிரபல பக்கமான Humans of Bombay  உடன் பிரதமர் மோடி தனது இளமைகால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

இளம்வயதில் இமயமலைக்கு புனித பயணம் மேற்கொண்டதாக தெரிவித்த மோடி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து திரும்பியவுடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாக கூறினார். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் 5 நாட்கள் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருப்பேன் என்றும், அங்குள்ள சுத்தமான தண்ணீர், மக்கள் யாரும் இல்லாத அமைதியான சூழல் மனதுக்கு இதம் அளிப்பவையாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.

வனப்பகுதியில் இருக்கும்போது வானொலி, செய்தித்தாள், இணையதளம் போன்றவற்றை பயன்படுத்துவது கிடையாது என கூறிய மோடி, 5 நாட்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து சென்றுவிடுவேன் என்றார். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தங்கியிருந்தபோது டீ, உணவு தயாரிப்பது, அலுவலகத்தை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை செய்ததாக மோடி நினைவு கூர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர் என்பதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
2. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடி
உத்தரபிரதேசத்தில் அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரதமர் மோடி ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
3. ஊழல் செய்யும் ஊழியர்களை நீக்க மத்திய அரசு திட்டம்: பணி பதிவேடுகளை ஆய்வு செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவு
ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்து வருமாறு அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
4. உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி
யோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. “மீண்டும் களத்திற்கு வருவீர்கள்” ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
மீண்டும் நீங்கள் களத்திற்கு வருவீர்கள் என்று தவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...