பிரியங்கா அரசியல் பிரவேசம்: ராகுல் தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது - பா.ஜனதா கருத்து


பிரியங்கா அரசியல் பிரவேசம்: ராகுல் தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது - பா.ஜனதா கருத்து
x
தினத்தந்தி 23 Jan 2019 10:39 AM GMT (Updated: 23 Jan 2019 10:39 AM GMT)

பிரியங்காவிற்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து ராகுல் தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என பா.ஜனதா கூறியுள்ளது.

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை  சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கட்சிகள் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, ராகுல் காந்தி தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என கூறியுள்ளது.

பிரியங்கா காந்தி நியமனம் தொடர்பாக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பேசுகையில், “இது எதிர்பார்த்த ஒன்றுதான், வாரிசை மேம்படுத்துவது காங்கிரஸை சேர்ந்தது.  அவர்கள் குடும்பம்தான் கட்சி என்று பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜனதா கட்சிதான் குடும்பம் என்று பார்க்கிறது. இப்போது காங்கிரஸ் ராகுல் காந்தி தோல்வியை அடைந்து விட்டார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது” என கூறினார்.

Next Story