நேதாஜி அணிந்த தொப்பியை பரிசாக அளித்த அவரது குடும்பத்திற்கு பிரதமர் மோடி நன்றி


நேதாஜி அணிந்த தொப்பியை பரிசாக அளித்த அவரது குடும்பத்திற்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 23 Jan 2019 11:09 AM GMT (Updated: 23 Jan 2019 11:09 AM GMT)

நேதாஜி அணிந்த தொப்பியை பரிசாக அளித்ததற்காக அவரது குடும்பத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 112வது பிறந்த தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் உள்ள அவரது மியூசியத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடிக்கு நேதாஜி அணிந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.  இந்த தொப்பி கிரந்தி மந்திரில் காட்சிக்காக வைக்கப்படும் என பிரதமர் கூறினார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணிந்திருந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் எனக்கு பரிசாக அளித்தனர்.  இதற்காக அவர்களுக்கு நான் நன்றி உடையவனாக இருக்கிறேன்.

இந்த தொப்பி செங்கோட்டை வளாகத்தில் உள்ள கிரந்தி மந்திரில் அமைந்த கேலரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  இங்கு வரும் இளைஞர்கள் பலருக்கு நேதாஜியின் வாழ்க்கை எழுச்சியூட்டும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story