தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு, சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பி வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார் + "||" + PM Modi receives cap once worn by Netaji Subhas Chandra Bose from leader’s family

பிரதமர் மோடிக்கு, சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பி வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்

பிரதமர் மோடிக்கு, சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பி வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்
பிரதமர் மோடிக்கு, சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பி வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்
புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 122–வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மோடிக்கு சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் வழங்கினர்.

பிரதமர் மோடி கூறும்போது, ‘‘சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொப்பி செங்கோட்டை வளாகத்தில் உள்ள கிராந்தி மந்திர் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்வையிடும் இளைஞர்கள் போஸ் வாழ்க்கையை அறிந்து ஈர்க்கப்படுவார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.