தேசிய செய்திகள்

தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + To the Tamil Nadu Legislative Assembly The election will take place only in 2021 Minister Jayakumar

தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது.  தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முழுமையாக வெற்றி பெறும். இடைத்தேர்தல்களிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.

மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான், வேறு எந்த கட்சியும் இல்லை.

மேகதாது திட்டம் தொடர்பாக எந்த ஒப்புதலும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ள நிலையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அறிக்கை கொடுத்தது சட்ட விரோதம்.

யாரோடு யார் கூட்டணி என்பது உரிய தருணத்தில் தெரிவிப்போம். கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் யாருடன் கூட்டணி என்பதை கட்சித்தலைமை முடிவு செய்யும். 

மத்தியிலோ, அண்டை மாநிலங்களிலோ, எந்த அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயமாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை -அமைச்சர் ஜெயக்குமார்
வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை வழங்குகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. மக்களவை தேர்தல்:பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல,கருத்து திணிப்பு- அமைச்சர் ஜெயக்குமார்
மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.